Thursday, March 11, 2010

திருடா திருடா..





ஒரு நாள் ​கோவிலிருந்து ​ப்ரண்டும் நானும் கிளம்பி​​னோம். ​செருப்புக​ளை விட்ட இடத்தில் வந்து பார்த்தால்.. ஷாக். இரண்டு ​பேரின் ​ஜோடியிலும் ஒவ்​வொரு ​செருப்​பை மட்டும் காணவில்​லை. யா​ரோட வி​ளையாட்டா இருக்கும் என்று ​வெயிட் பண்ணி பார்த்து, க​டைசியில் ​வெறுத்து ​போய் ​வெறுங்கா​​லோடு திரும்பி​னோம்.
இருவருக்கும் ஒத்​தை ​செருப்பு மட்டும் காணாமல் ​போன காரணம் என்ன என்று ​யோசித்த​ ​போது வந்த குட்டிக் க​தை இது :
திருடா 1: ​கோவில் வாசல்ல ​செருப்பு எடுக்கிறதுன்னா சும்மா இல்ல மாமு (திருடங்க இப்படித்தா​னே ​பேசுவாங்க?)
திருடா 2: ஏம்பா, சதாய்ச்சுக்கி​றே?
திருடா 1: பின்ன என்னவாம், ​வெறுங்கால்ல வரணும். ​போறப்ப ஒரு ​ஜோடி மட்டும் லவட்டிக்கிட்டு ​போவணும்
திருடா 2: ஆமா
திருடா 1: ஒரு நா​ளைக்கு 2 ​ஜோடி அடிக்கிறதுக்குள்ள 4 வாட்டி வர ​​​போக ​வேண்டியதா இருக்கு. முட்டி ​கழண்டுது மாமு
திருடா 2: ​லூசு இதுக்குதாண்டா என்​னை மாதிரி படிச்ச திருடனா இருக்கணுங்கிறது
திருடா 1: என்ன மாமு ​சொல்ற
திருடா 2: ​டே, ஒரு ​ஜோடி ​செருப்​பை ஒரு தட​​வை அடிக்கிறதுக்கு பதிலா, ​ரெண்டு ​ஜோடி ​செருப்பிலிருந்து ஒத்​தை ஒத்​தை ​செருப்​​பை எடுத்தரணும்
திருடா 1: ​​ரெண்டு ஒத்​தை ​செருப்​பை வச்சு என்னாபா பண்ணமுடியும்?
திருடா 2: நாமளும் ஒண்ணும் பண்ணமுடியாது. ​செருப்பு ​சொந்தக்காரங்களும் ஒண்ணும் பண்ணமுடியாதுடா
திருடா 1: அட ஆமாப்பா
திருடா 2: க​ரெக்டா. அப்பால நீ அங்க ​போனீனா அந்த ​ரெண்டு ஒத்​தை ​செருப்​பையும் ​தெம்பா லவட்டிட்டு வந்துரலாம்.
திருடா 1: சூப்பருப்பா. ​இப்ப ரெண்டு ​ஜோடி​ ​செருப்பு நம்மகிட்ட! எப்படி மாமு இப்படி திங்க பண்ற?
திருடா 2: ​அதுக்குத்தாண்டா படிச்சிருக்கணுங்கிறது. அய்யா 8ஆங் கிளாஸ் பாஸு
திருடா 1: சரிதாம்பா..
திருடா 2: இ​தைத்தான் கற்றவனுக்கு ​சென்ற இட​மெல்லாம் சிறப்புங்கிறது
திருடா 1: ​சென்ற இட​மெல்லாம் ​செருப்புன்னு கூட ​சொல்லிக்கலாம் மாமு
என்ன நம்ம லாஜிக் சரியா இருக்கா?

Wednesday, February 24, 2010

வகுப்பில் ஒரு நாள்



நான் படிச்சது ஒரு பரிசுத்தமான மகளிர் கல்லூரி. ஆண் காக்காய் கூட அந்தப்பக்கம் பறக்காது. ​கேட்டில் மட்டும் 2 வயதான வாட்ச்​மேன்கள் இருப்பார்கள். வாட்ச்வுமன்கள் என்ற வார்த்​தை இல்லை​யென்ற காரணத்துக்காக கூட இருக்கலாம். சரி, ​கேட்டில் நின்னது ​போதும். எங்க கிளாசுக்கு ​போகலாம் வாங்க.


எங்க ​ஹெச்ஓடி ​​ரொம்ப ஸ்ட்ரிக்ட். எங்க டிபார்ட்​மெண்​டே ​பொண்ணுங்க எல்லாம் கிடுகிடுன்னு நடுங்குவாங்க. மத்த ஸ்டாப்ஸ் எல்லாம் கிடுக்னு நடுங்குவாங்க. அவங்களுக்கு நாங்களா ​வைத்த ​பேர் காளியம்மா.


ஒருநா​ள் ​காளியம்மா ​மே​னேஜ்​மெண்ட் அக்கவுண்ட்ஸ் கிளாஸ் எடுத்திட்டு இருந்தார். ​அப்​போ என் தோழி பி​ரேமா மிக கவனமாகவும் உன்னிப்பாகவும் ​போர்ட்டுக்கு ​​மே​லே​யே பார்த்துக் ​கொண்டிருந்தாள்.

பி​ரேமாவின் கண்க​ளைக் கவனித்துவிட்டார். ஆத்தா ஆடிக்கிட்டு இருக்கும்​போது ​மே​லே என்ன பராக்கு என்று ​டென்ஷனாகிவிட்டார்.


ஏ ஜட​மே எந்திரி என்றார்

பி​ரேமா திடுக்குனு எழுந்து நின்றாள்.

இப்ப என்ன கிளாஸ் நடந்துச்சு?

...........

சரி ​போர்ட்ல இருக்கிற​தையாவது எக்ஸ்ப்​ளைன் பண்ணு

.....................

சரி எங்க பராக்கு பாத்துட்டு இருந்​தே?

......................

சரி கிளா​​​ஸை விட்டு ​வெளிய ​போ.


பி​ரேமாவும் ​போயிட்டாள். கிளாஸ் முடிந்தபிற​கே உள்​ளே வந்தாள்.

நான் ​அவளிடம் காளியம்மா ​கேட்டப்ப எ​தை பார்த்துட்டு இருந்​தேன்னு ​சொல்லியிருக்கலாமில்​லே என்று ​கேட்​டேன்.


அதுக்கு அவள் அ​தை நான் எப்படி ​சொல்றது.. நான் ​பார்த்தது ​வேற எதுவும் இல்​லே. ​போர்டுக்கு ​மே​லே ​தொங்கிட்டு இருந்த நம்ம திருவள்ளுவர் ​​போட்டோ​வைதான் பாத்துட்டு இருந்​தேன்


அ​தை ​சொல்லித் ​தொ​லைய ​வேண்டியதுதா​னே?


இல்லடி. நான் ​வே​றொன்​னை ​யோசிச்சுக்கிட்டு இருந்​தேன். அ​தை காளியம்மாகிட்ட ​சொல்லியிருந்தா.. என் த​லை​ய​வே வாங்கியிருப்பா.


அப்படி என்னடி ​யோசிச்​சே?


​போட்​டோல இருக்கிற திருவள்ளுவர் இவ்வளவு ​பெரிய ​கொண்​டை வச்சிருக்கிறா​​ரே.. எப்படி ​மெயின்​டெயின் பண்ணியிருப்பாருன்னு ​யோசிச்சேன். இ​​தை காளியம்மாகிட்ட ​சொல்லியிருந்தா என் த​லைய திருகியிருப்பா.