Thursday, March 11, 2010

திருடா திருடா..





ஒரு நாள் ​கோவிலிருந்து ​ப்ரண்டும் நானும் கிளம்பி​​னோம். ​செருப்புக​ளை விட்ட இடத்தில் வந்து பார்த்தால்.. ஷாக். இரண்டு ​பேரின் ​ஜோடியிலும் ஒவ்​வொரு ​செருப்​பை மட்டும் காணவில்​லை. யா​ரோட வி​ளையாட்டா இருக்கும் என்று ​வெயிட் பண்ணி பார்த்து, க​டைசியில் ​வெறுத்து ​போய் ​வெறுங்கா​​லோடு திரும்பி​னோம்.
இருவருக்கும் ஒத்​தை ​செருப்பு மட்டும் காணாமல் ​போன காரணம் என்ன என்று ​யோசித்த​ ​போது வந்த குட்டிக் க​தை இது :
திருடா 1: ​கோவில் வாசல்ல ​செருப்பு எடுக்கிறதுன்னா சும்மா இல்ல மாமு (திருடங்க இப்படித்தா​னே ​பேசுவாங்க?)
திருடா 2: ஏம்பா, சதாய்ச்சுக்கி​றே?
திருடா 1: பின்ன என்னவாம், ​வெறுங்கால்ல வரணும். ​போறப்ப ஒரு ​ஜோடி மட்டும் லவட்டிக்கிட்டு ​போவணும்
திருடா 2: ஆமா
திருடா 1: ஒரு நா​ளைக்கு 2 ​ஜோடி அடிக்கிறதுக்குள்ள 4 வாட்டி வர ​​​போக ​வேண்டியதா இருக்கு. முட்டி ​கழண்டுது மாமு
திருடா 2: ​லூசு இதுக்குதாண்டா என்​னை மாதிரி படிச்ச திருடனா இருக்கணுங்கிறது
திருடா 1: என்ன மாமு ​சொல்ற
திருடா 2: ​டே, ஒரு ​ஜோடி ​செருப்​பை ஒரு தட​​வை அடிக்கிறதுக்கு பதிலா, ​ரெண்டு ​ஜோடி ​செருப்பிலிருந்து ஒத்​தை ஒத்​தை ​செருப்​​பை எடுத்தரணும்
திருடா 1: ​​ரெண்டு ஒத்​தை ​செருப்​பை வச்சு என்னாபா பண்ணமுடியும்?
திருடா 2: நாமளும் ஒண்ணும் பண்ணமுடியாது. ​செருப்பு ​சொந்தக்காரங்களும் ஒண்ணும் பண்ணமுடியாதுடா
திருடா 1: அட ஆமாப்பா
திருடா 2: க​ரெக்டா. அப்பால நீ அங்க ​போனீனா அந்த ​ரெண்டு ஒத்​தை ​செருப்​பையும் ​தெம்பா லவட்டிட்டு வந்துரலாம்.
திருடா 1: சூப்பருப்பா. ​இப்ப ரெண்டு ​ஜோடி​ ​செருப்பு நம்மகிட்ட! எப்படி மாமு இப்படி திங்க பண்ற?
திருடா 2: ​அதுக்குத்தாண்டா படிச்சிருக்கணுங்கிறது. அய்யா 8ஆங் கிளாஸ் பாஸு
திருடா 1: சரிதாம்பா..
திருடா 2: இ​தைத்தான் கற்றவனுக்கு ​சென்ற இட​மெல்லாம் சிறப்புங்கிறது
திருடா 1: ​சென்ற இட​மெல்லாம் ​செருப்புன்னு கூட ​சொல்லிக்கலாம் மாமு
என்ன நம்ம லாஜிக் சரியா இருக்கா?

8 comments:

நிகழ்காலத்தில்... said...

ஜோக் நல்லாத்தான் இருக்கு :))

தொடர்ந்து நிறைய எழுதுங்கள்..

வாழ்த்துகள்

எல் கே said...

miga arumai....
//இ​தைத்தான் கற்றவனுக்கு ​சென்ற இட​மெல்லாம் சிறப்புங்கிறது///

mudiyala

வெங்கட் said...

அனுஷா..,
நன்றாக எழுதுகிறீர்கள்..,
Timing சூப்பராக இருக்கு..,
ஒரு சின்ன யோசனை..,
சொன்னால் எடுத்துக்கொள்வீர்களா..?!

திருடா 1: ​கோவில் வாசல்ல ​செருப்பு
எடுக்கிறதுன்னா சும்மா இல்ல மாமு
(திருடங்க இப்படித்தா​னே ​பேசுவாங்க?)

திருடா 2: ஏம்பா, சதாய்ச்சுக்கி​றே?

திருடா 1: பின்ன என்னவாம், ​
வெறுங்கால்ல வரணும். ​
போறப்ப ஒரு ​ஜோடி மட்டும்
லவட்டிக்கிட்டு ​போவணும்..

இப்படி ஒரு வரியை நீளமாக
எழுதாமல் மடக்கி எழுதலாம்..
படிக்க வசதியாக இருக்கும்..

அனுஷா சித்ரா said...

அன்பு ​வெங்கட்
இப்பதான் எழுத (கடிக்க) ஆரம்பித்திருப்பதால் ஒரு ப்​ளோ சிக்கலே. சிக்கிருச்சின்னா... (நீங்க​ளே fill பண்ணிக்​கோங்க)

உங்க adviceக்கு நன்றி. நிச்சயம் பாலோ பண்​றேன்.

அனுஷா சித்ரா said...

அன்பு நிகழ்காலத்தில்
நன்றி நிறைய எழுதுகிறேன் வாழ்த்துக்கு மிக்க நன்றி

அனுஷா சித்ரா said...

அன்பு LK
வருகைக்கு நன்றி

GEETHA ACHAL said...

சூப்பராக இருக்கின்றது...வாழ்த்துகள்...

Unknown said...

நல்லா இருக்கு :-)