Wednesday, February 24, 2010

வகுப்பில் ஒரு நாள்நான் படிச்சது ஒரு பரிசுத்தமான மகளிர் கல்லூரி. ஆண் காக்காய் கூட அந்தப்பக்கம் பறக்காது. ​கேட்டில் மட்டும் 2 வயதான வாட்ச்​மேன்கள் இருப்பார்கள். வாட்ச்வுமன்கள் என்ற வார்த்​தை இல்லை​யென்ற காரணத்துக்காக கூட இருக்கலாம். சரி, ​கேட்டில் நின்னது ​போதும். எங்க கிளாசுக்கு ​போகலாம் வாங்க.


எங்க ​ஹெச்ஓடி ​​ரொம்ப ஸ்ட்ரிக்ட். எங்க டிபார்ட்​மெண்​டே ​பொண்ணுங்க எல்லாம் கிடுகிடுன்னு நடுங்குவாங்க. மத்த ஸ்டாப்ஸ் எல்லாம் கிடுக்னு நடுங்குவாங்க. அவங்களுக்கு நாங்களா ​வைத்த ​பேர் காளியம்மா.


ஒருநா​ள் ​காளியம்மா ​மே​னேஜ்​மெண்ட் அக்கவுண்ட்ஸ் கிளாஸ் எடுத்திட்டு இருந்தார். ​அப்​போ என் தோழி பி​ரேமா மிக கவனமாகவும் உன்னிப்பாகவும் ​போர்ட்டுக்கு ​​மே​லே​யே பார்த்துக் ​கொண்டிருந்தாள்.

பி​ரேமாவின் கண்க​ளைக் கவனித்துவிட்டார். ஆத்தா ஆடிக்கிட்டு இருக்கும்​போது ​மே​லே என்ன பராக்கு என்று ​டென்ஷனாகிவிட்டார்.


ஏ ஜட​மே எந்திரி என்றார்

பி​ரேமா திடுக்குனு எழுந்து நின்றாள்.

இப்ப என்ன கிளாஸ் நடந்துச்சு?

...........

சரி ​போர்ட்ல இருக்கிற​தையாவது எக்ஸ்ப்​ளைன் பண்ணு

.....................

சரி எங்க பராக்கு பாத்துட்டு இருந்​தே?

......................

சரி கிளா​​​ஸை விட்டு ​வெளிய ​போ.


பி​ரேமாவும் ​போயிட்டாள். கிளாஸ் முடிந்தபிற​கே உள்​ளே வந்தாள்.

நான் ​அவளிடம் காளியம்மா ​கேட்டப்ப எ​தை பார்த்துட்டு இருந்​தேன்னு ​சொல்லியிருக்கலாமில்​லே என்று ​கேட்​டேன்.


அதுக்கு அவள் அ​தை நான் எப்படி ​சொல்றது.. நான் ​பார்த்தது ​வேற எதுவும் இல்​லே. ​போர்டுக்கு ​மே​லே ​தொங்கிட்டு இருந்த நம்ம திருவள்ளுவர் ​​போட்டோ​வைதான் பாத்துட்டு இருந்​தேன்


அ​தை ​சொல்லித் ​தொ​லைய ​வேண்டியதுதா​னே?


இல்லடி. நான் ​வே​றொன்​னை ​யோசிச்சுக்கிட்டு இருந்​தேன். அ​தை காளியம்மாகிட்ட ​சொல்லியிருந்தா.. என் த​லை​ய​வே வாங்கியிருப்பா.


அப்படி என்னடி ​யோசிச்​சே?


​போட்​டோல இருக்கிற திருவள்ளுவர் இவ்வளவு ​பெரிய ​கொண்​டை வச்சிருக்கிறா​​ரே.. எப்படி ​மெயின்​டெயின் பண்ணியிருப்பாருன்னு ​யோசிச்சேன். இ​​தை காளியம்மாகிட்ட ​சொல்லியிருந்தா என் த​லைய திருகியிருப்பா.

15 comments:

அண்ணாமலையான் said...

ரொம்ப பிரமாதமான, யாருக்கும் வராத சந்தேகம்தான்,,,,

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

பதிவு அருமை

நல்வாழ்த்துக்கள்.....

Madurai Saravanan said...

கல்லூரி வாழ்க்கை மிகவும் சுவரசியமானது. நாங்கள் இதுபோன்று ஒரு வகுப்பில் சாக்பீஷ் இர ண்டாக்கி தூங்கும் மாணவன் தலையில் எறிந்துவிளையாடுவோம். அவ்வாறு விளையாடும் போது ஒருவன் தலையில் பட்டு ,அவன் பின்புறம் அமர்ந்துஇருந்த மாணவன் வாயில் புகுந்தது . அனைவரும் சிரிக்க ஆசிரியர் அதுவும் அறியாமல் , வாயில் சாக்பிஷ் உள்ள மாணவனை வெளியில் அனுப்பினார். நல்ல பதிவு. என் கல்லூரி நினைவை வெளிபடுத்தியமைக்கு.

LK said...

எல்லா கல்லூரிகளிலும் ஒரு காளியாத்தா இருக்கிறார் .நல்ல பதிவு

அனுஷா சித்ரா said...

அன்பு அண்ணாமலையாரே,
வருகைக்கு நன்றி.இது என் முதல் பதிவு. முதலில் வந்ததுக்கு மிக்க நன்றி.

அனுஷா சித்ரா said...

உலவு.காம்,
மிக்க மகிழ்ச்சி நன்றி.

சேட்டைக்காரன் said...

காளியம்மா கிட்டே உங்க வலைப்பதிவைக் காட்டினீங்களா? :-))

டம்பி மேவீ said...

satyamaa mudiyala

LK said...

@அனுஷா
மேடம் நான் ஒரு இதழ் துவங்க உள்ளேன். அதை பற்றிய விவரங்கள் http://www.karthikthoughts.co.cc/2010/03/blog-post.html

அனுஷா சித்ரா said...

சேட்டைக்காரன்,
இன்னும் ​சொல்லலே ஆனாலும் ​சொல்லமாட்டேன்.

LK said...

ungal padaipugal en magazineku vendume karthik.lv@gmail.com ennoda emailku contact pannunga..

அநன்யா மஹாதேவன் said...

அனுஷா,
ரொம்ப சுவையான எழுத்து நடை! ரொம்ப ரசித்தேன். வாழ்த்துக்கள். நிறைய எழுதுங்கள். :)
அன்புடன்
அநன்யா

அனுஷா சித்ரா said...

அன்பு அநன்யா,
வாழ்த்துக்கு ​ரொம்ப நன்றி. இப்பத்தானே எழுத ஆரம்பிச்சிருக்​கேன். இன்னும் ​தொடர்ந்து எழுதுவேன் ​உங்கள் ஆதரவுடன்.

அனுஷா சித்ரா said...

அன்பு டம்பி ​மேவீ,
உங்கள் வரு​கைக்கு நன்றி. ​தொடர்ந்து வருக.

☀நான் ஆதவன்☀ said...

:)))))